Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Forewords

நூல் : உலகம் அன்று, நேற்று, இன்று நமது கைகளில்


ஆசிரியர் : மவ்லவி முஹம்மத் ரஸீன் மலாஹிரீ

அப்துல் மஜீத் அக்கடமியின் பணிப்பாளரும் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் பணிப்பாளருமாகிய அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்கள் மனமுவந்தளித்த அணிந்துரை


பிரபஞ்சம், மனிதர்கள், ஏனைய ஜீவராசிகள், தாவரங்கள், கனிமங்கள் என கண்ணுக்குத் தென்பட்டும், தென்படாமலும், அறிவுக்கு எட்டியும், எட்டாமலும் பரந்து, விரிந்து விரவிக்கிடக்கும் எண்ணிறந்த வஸ்துக்கள் யாவும் எல்லாம் வல்ல இறைவனின் படைப்புகளாகும். படைப்பையும் படைப்பின் இரகசியத்தையும் படைப்பாளன் மட்டுமே சரியாக, முழுமையாக அறிந்தவன்.

படைப்புக்களைப் பற்றி படிப்பது இறைவனின் மகத்தான, ஈடிணையற்ற சக்தியை புரிந்துகொள்ள உதவும். ஒவ்வொருவரும் அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட துறையோடு நிற்பது வழமை. தன் துறைக்கப்பால் சென்று தன்னைச் சுற்றியுள்ளவை பற்றி அறிந்துகொள்ள பலருக்கு விருப்பம் வருவது கிடையாது. இந்த மனப்பாங்கு நல்லதல்ல என்பதை உணர்ந்த சான்றோர் இவ்வாறு செப்பினர்: ‘கண்டது கற்க பண்டிதனாவான்.’

பொது அறிவு ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது. பொதுவாக எல்லோரும் தெரிந்திருக்க வேண்டியவை ஏராளம். வாழ்வியலில் பொது அறிவை புறந்தள்ளி வாழ முடியாது. நானிலத்தின் நாளாந்த நாலாவித நடப்புகள் குறித்து எதுவம் தெரியாத ஞானசூனியமாக இருப்பது அறிவுடைமையன்று.

பொது அறிவை அகலப்படுத்த, சிருஷ்டிகளில் அமிழ்ந்து கிடக்கும் மாபெரும் இறை வல்லமையை தெரிந்துகொள்ள தேவையான நூல்கள் காலத்துக்குக் காலம் வெளிவருவதுண்டு. அந்த வரிசையில் இடம் பிடிக்கும் மற்றொரு நூல் ‘உலகம் அன்று, நேற்று, இன்று நமது கைகளில்’.

அருமையான, புதுமையான, சுவையான பல தகவல்கள் தாங்கிய இந்தப் பொது அறிவு நூல் எழுத்தாளர் மவ்லவி முஹம்மத் ரஸீன் மலாஹிரீ அவர்களின் தொகுப்பாகும். வயது, பால், சமய வேறுபாடின்றி சகலரும் வாசித்து பயன் பெற முடியும்.

நூலுக்கும் நூலாசிரியருக்கும் என் உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.

எச். அப்துல் நாஸர்.
229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்,
ஸ்ரீ லங்கா.

2016.08.22


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page