Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1425 கி.பி. 2004


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின்
ஈத் அல்-பித்ர் வாழ்த்துச் செய்தி


ஒரு மாத கால பயிற்சிப் பாசறையை முடித்துக் கொண்ட முஸ்லிம் சமூகம் உள்ளங்களில் மகிழ்ச்சி ததும்ப ஹிஜ்ரி 1425 நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்ற இவ்வேளை சகல முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் எனது இதயபூர்வ ஈத் அல்-பித்ர் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பேருவகையடைகின்றேன்.

புனித ரமழானில் நோன்பிருந்து, இரவு வணக்கங்களில் ஈடுபட்டு, இஃதிக்காப், குர்ஆன் ஓதல், திக்ர், துஆ, தராவீஹ், ஸக்காத், ஸதக்கா போன்ற உன்னத நற்கருமங்களைச் செய்து இறை நெருக்கத்தைப் பெற்ற அதே வேளை தவ்பஹ் (பாவ மன்னிப்புக்) கோரி, தம்மை பரிசுத்தப் படுத்திக் கொண்டவர்களாக, தனித் தனியாகவும், கூட்டாகவும் செய்த இவ்வணக்கங்கள் மூலம் தாம் கொண்டிருக்கும் ஓரிறை நம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டியுள்ளனர். ரமழானிய பயிற்சிப் பாசறையில் பயின்றவைகள் பழக்கத்துக்குக் கொண்டு வரப்பட வில்லையானால் காற்றினிலெறிந்த நிலவுக்கும், கடலினில் பெய்த மழைக்கும் தான் அது சமனாகும். எனவே பயின்றவற்றை பழக்கத்திற்குக் கொண்டுவரும் தீர்மானத்தோடு இத்திருநாளைக் கொண்டாடுவோம்.

துன்பங்களும், துயரங்களும் பெரும்பாலான முஸ்லிம்களின் இல்லங்களில் கூடாரம் அமைத்திருக்க ஈதுல் பித்ரைக் கொண்டாடும் முஸ்லிம் உம்மாவைப் பற்றி ஒரு கனம் சிந்திப்போம். வன்முறை, அடக்குமுறை, இன சுத்திகரிப்பு, பலவந்த வெளியேற்றம், வறுமை போன்றவற்றிற்கு ஆட்பட்டு துக்ககரமான வாழ்க்கை நடத்தும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் விடயத்தில் கரிசனை காட்டி எம்மால் முடியுமான உதவிகளையும் இப்பாதிக்கப்பட்டோருக்கு வழங்க முன் வருவோம். ‘முஸ்லிம்கள் விவகாரத்தில் கவனம் செலுத்தாதவர் முஸ்லிம்களைச் சார்ந்தவரல்ல’ எனும் நாயக வாக்கியத்தை மனதிற் கொள்வோம்.

பெருநாளைத் தீர்மானிப்பதற்காக சிரமப்பட்டு சிரத்தையுடன் வானில் இளம்பிறையைத் தேடுகின்ற முஸ்லிம்கள் வானில் எங்காவது ஒரு புறத்தில் சமாதான ஒளிக்கீற்று சற்றேனும் பளிச்சிடுகின்றதாவென ஏக்கத்துடன் அன்னார்ந்து பார்க்கின்றனர்.


அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2004.11.10

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page